வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளர் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளர் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்..

வடமாகாணம் முழுவதும் ப.நோ.கூட்டுறவு சங்கங்களில் 116 ரூபாய் 50 சதத்திற்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மு.நந்தகோபன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் பதுக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சீனியில் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்து 500 கிலோ கிராம் சீனி வடமாகாணத்திற்கு

பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது. அவை 116 ரூபாய் 50 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆகவே மக்கள் சீனியை கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சில்லறையாக வாங்கலாம்.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் ப.நோ.கூ சங்கங்களில் சீனி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட விடயம் அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு