யாழ்.அச்சுவேலி, நெல்லியடி பகுதிகளில் இரு சம்பவங்களில் பொலிஸார் எதற்காக பொறுமை காத்தனர்? பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி, நெல்லியடி பகுதிகளில் இரு சம்பவங்களில் பொலிஸார் எதற்காக பொறுமை காத்தனர்? பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ விளக்கம்..

மனிதாபிமான செயற்பாடுகள், மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை நாட்டில் அபாயகரமான கொரோனா வைரஸ் பரவிவருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். என பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற இரு சம்பவங்களை மையப்படுத்தி தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அண்மையில் யாழ்.அச்சுவேலியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவருடைய மரண வீட்டிற்கு பெருமளவு மக்கள் சென்றிருந்தனர். அவர் அப்பிரதேச மக்களால் மதிக்கப்படுகிறார். அவருடைய மரணம் மக்களின் உளவியலை பாதித்துள்ளது. அதுவே அதிக மக்கள் மரண வீட்டில் கலந்துகொள்ள காரணம் என பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

மற்றய சம்பவம் யாழ்.நெல்லியடி பகுதியில் தற்போதுள்ள நெருக்கடியான சூழலை கருதி மக்களுக்கு நிதி உதவிகளை செய்திருக்கின்றார். உண்மையில் இது மனிதாபிமான செயற்பாடு. இவ்வாறு நாம் குறிப்பிட்ட இரு சம்பவங்களிலும் மனிதாபிமானம், அன்பு

கலந்திருக்கின்றது. அதனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டிய விடயமும் இதில் உள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. மேலும் அபாயகரமான தொற்றுநோய் பரவி வருகின்றது. 

மக்களே நோய் காவிகளாக இருக்கின்றனர். அதனால் தனிநபர்கள், பின்னர் குடும்பம் அதற்கும் பின்னர் சமூகம் என பாரிய பாதிப்பை உண்டாக்கும் ஆபத்துள்ளது. ஆகவே மதிப்பளிக்கவேண்டிய செயற்பாடுகளினால் ஆபத்து உண்டாகும் என்றால் 

மதிப்பளிப்பதில் பயன் இருக்கபோவதில்லை. இந்த இடங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாரை பயன்படுத்தினால் அது எமக்கும் வருத்தமளிப்பதாக அமையும். எனவே தொற்று அதிகளவில் பரவுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புடன் மக்கள் நடக்கவேண்டும். 

என அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு