SuperTopAds

ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது ஏன்? சுகாதார அமைச்சு விளக்கம், எந்த ஆபத்தும் இல்லாமல் நாட்டை திறக்க ஒத்துழைக்கும்படி கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது ஏன்? சுகாதார அமைச்சு விளக்கம், எந்த ஆபத்தும் இல்லாமல் நாட்டை திறக்க ஒத்துழைக்கும்படி கோரிக்கை..

நாட்டை திறக்கும்போது ஆபத்தில்லாமல் திறப்பதற்காகவே ஊரடங்குச் சட்டத்தை 21ம் திகதி வரையில் நீடித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது. 

இதனால் ஆபத்தில்லாமல் நாட்டை மீண்டும் திறக்க முடியும். என நாங்கள் நம்புகிறோம். அதுவரை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள், 

பாதுகாப்பாக இருங்கள். என சுகாதார அமைச்சர் தனது ருவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.