யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலம் மல்லாவி சென்றது எப்படி? இரவு நேரத்தில் சடலத்தை பார்வையிட்டது யார்? பொலிஸ் விசாரணை ஆரம்பம்..
யாழ்.பருத்தித்துறையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய சடலத்தை மல்லாவி வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பியதுடன் பிரேத அறையில் கடந்த 9ம் திகதி இரவு சீல் வைக்கப்பட்ட உடலம் பிரித்து பார்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மல்லாவியை நிதந்தர முகவரியாகவும் அல்வாய் வடக்கு மத்தி பருத்தித்துறையினை தற்காலிக முகவரியாகவும் கொண்ட வயோதிப பெண் உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் மல்லாவியில் வசித்துவருகின்றார்கள்(அரச உத்தியோகத்தர்கள்) இந்நிலையில் மல்லாவியில் வசித்துவரும்
அரச உத்தியோகத்தரான உயிரிழந்தவரின் மகன் வீடு கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறையில் உயிரிழந்த பெண்ணின் உடலம் எவ்வாறு மல்லாவி மருத்துவமனைக்கு வந்தது ?என்ன காரணத்திற்க்கா கொண்டுவரப்பட்டது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட உடலம் சுகாதார நடைமுறைகளை மீறி, எந்த அனுமதியும் இல்லாமல் பொலித்தின் சீல் உடைக்கப்பட்டு உடலம் பார்வையிடப்பட்டிருக்கும் நிலையில் குறித்த சம்பவம் மல்லாவியில் பெரும்சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளதுடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் மல்லாவி வந்தiமை,
உடல் பொலித்தீனால் சீல் வைக்கப்பட்ட நிலையில் அது உடைக்கப்பட்டு உடலத்தினை பார்வையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளதுடன் வழக்கு பதிவுசெய்துள்ளார்கள்.
இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.