SuperTopAds

பாடசாலைகளை ஆரம்பிக்க சிறந்த சூழல் இப்போது இல்லை! சுகாதார அமைச்சு திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளை ஆரம்பிக்க சிறந்த சூழல் இப்போது இல்லை! சுகாதார அமைச்சு திட்டவட்டம்..

நாட்டிலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளதென கூறியிருக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத், அதற்குரிய திட்டங்களை கல்வியமைச்சு வழங்கவேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளாந்தம் தொற்று உறுதியாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

எனினும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சில நேரங்களில் நாளாந்த நோயாளர்களின் முழு அறிக்கையும் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அதில் சில தாமதம் ஏற்படும்.

அவ்வாறான தரவுகள் தொற்று நோயியல் தடுப்பு பிரிவினால் பிந்திக்கிடைக்கப்பெற்ற தரவுகளாக மொத்த நோயாளர்களுடன் சேர்க்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.