ஊரடங்கு தொடர்பில் தீவிரமாக ஆராய்கிறது அரசு! அடுத்த சில நாட்களில் தீர்மானத்தை வெளியிடும் என நம்பிக்கை, கொழும்பு ஊடகங்கள் தகவல்..
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 13ம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதுடன், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் உள்ளிட்ட மிக முக்கிய துறைகளும் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளன.
இதனை அடிப்படையாக கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகின்றது. ஊரடங்கை தளர்த்தி அத்தியாவசிய துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன்
மீள தொடங்கவும் கூடிய விரைவில் பாடசாலைகளை திறக்கவும் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அதேபோல் ஊரடங்கு அமுலாக்கம் நாட்டில் கொரோனா மரண வீதத்தை குறைத்துள்ளமையினையும் கருத்தில் கொண்டு
அரசு இந்த தீர்மானத்தை ஆராய்வதாக கூறப்படுகின்றது.