வடக்கில் அலைபேசி பணப்பரிமாற்ற வசதிக்கு அவுஸ்ரேலியா உதவி!

ஆசிரியர் - Admin
வடக்கில் அலைபேசி பணப்பரிமாற்ற வசதிக்கு அவுஸ்ரேலியா உதவி!

பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்கள், அலைபேசி இணைப்பு ஊடாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை, அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கியுள்ளதென, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு, யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரின் ஹஸ்டன் தலைமையிலான குழுவினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில், ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்-

“ஏரிஎம், சிடிஎம் இயந்திரங்கள் ஊடாக பணத்தை மீளப்பெறல் மற்றும் வைப்பிலிடலைப் போன்றே, இந்த அலைபேசி இணைப்பின் ஊடான பணப் பரிமாற்றமும் இடம்பெறும். “இவ்வாறான நிலையங்கள் 200, யாழில் அமைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 20 அமைக்கப்படவுள்ளன” என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு