ஊரடங்கு நீடிக்கப்படுமா..? நாளை ஜனாதிபதி தலைமையில் நாளை உயர்மட்டக் கலந்துரையாடல்..
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக நாளை தீர்மானிக்கப்படும். என சுகாதார அமைச்சு தொிவித்திருக்கின்றது.
COVID-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளை கூடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
இதன்போது, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.