SuperTopAds

ஊரடங்கு சட்டம் மேலும் 2 வாரங்கள் நீடிக்கப்படவேண்டும்! சமூகத்தில் 50 ஆயிரம் தொற்றாளர்கள், கொவிட் கட்டுப்பாட்டுக்காக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் மேலும் 2 வாரங்கள் நீடிக்கப்படவேண்டும்! சமூகத்தில் 50 ஆயிரம் தொற்றாளர்கள், கொவிட் கட்டுப்பாட்டுக்காக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்..

நாட்டில் தினசரி 5 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தொிவிக்கப்பட்டாலும், சமூகத்தில் 50 ஆயிரம் தொற்றாளர்கள் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுவதாக கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். 

நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலமை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அவர் குறிப்பிட்டார்.சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே இன்று ஊடகங்களுக்கு இந்த கருத்துக்களை தெரிவித்தார்.