நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திருக்கின்றனர்!!

ஆசிரியர் - Admin
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திருக்கின்றனர்!!

நிச்சயமாக ஒரு நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திருக்கின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்:-இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டு மற்றும் சரணடைந்து பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியை கோரி நிற்பதோடு இது தொடர்பாக சர்வதேசத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதிலும், இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான எந்தவித தகவல்களும் எமது உறவுகளுக்கு கிடைக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் தமது கைகளால் பாதுகாப்பு படையினரிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? என பல உறவுகள் இன்றும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக ஒரு நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திருக்கின்றனர்.என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு