தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! பொலிஸ் பேச்சாளர் நிஹால் தலதுடுவ எச்சரிக்கை..
தடுப்பூசி பெறுவதற்கு மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தலதுடுவ கூறியிருக்கிறார்.
டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.