தடுப்பூசி வழங்கலிலும் முறைகேடு! இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது அதிகாரம், இராணுவ தளபதி அறிவிப்பு..
பைசர் தடுப்பூசி வழங்கலில் நடந்த முறைகேட்டையடுத்து தடுப்பூசி வழங்குவதற்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்திருக்கின்றார்.
புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைசர் தடுப்பூசியை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில்கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பைசர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை
இராணுவமே முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். வழமையான நடைமுறைகளின் பைசரை பெறுவதற்கு தகுதியற்ற தனிநபருக்கு அதனை வழங்கப்போவதில்லை என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.