ஒருநாள் கூட பணிக்கு சென்றதில்லை! ஆனால் சம்பளம், போக்குவரத்துபடி, எரிபொருள் படி பெறும் அரச ஊழியர்கள், பொதுநிர்வாக அமைச்சு கூறுகிறது..
ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு நாள் கூட பாடசாலைக்கு செல்லாத அதிபர், ஆசிரியர்கள் மற்றும் 6 மாதங்களா ஒரு நாள் கூட பணிக்கு செல்லாத பெருமளவு அரச ஊழியர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பதாக பொதுநிர்வாக அமைச்சு கூறியுள்ளது.
மேலும், உயர் அதிகாரிகள் சில மணிநேரங்களுக்கு மாத்திரம் கடமைக்கு வந்துவிட்டு போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அலுவலகங்களில் சுமார் 2, 3 மணித்தியாலங்கள்
மாத்திரமே இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களின் கடமை நேரத்திற்கு அமைவாக சம்பளத்தை செலுத்தி வந்துள்ளன.
மேலும் சில நிறுவனங்கள் எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளும் இன்றி அடிப்படை சம்பளத்தை மட்டும் ஊழியர்களுக்கு வழங்கி வந்துள்ளன.