SuperTopAds

தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் பந்துலவுக்கு கொரோனா தொற்று! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆசிரியர் - Editor I
தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் பந்துலவுக்கு கொரோனா தொற்று! அடுத்த நடவடிக்கை என்ன?

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

இதனை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அத்தோடு, தன்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் 

தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.அதன்படி, நேற்றைய தினம் (27) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தில் 

அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் 

இந்த செயலணிக் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் அமைச்சர் பந்துலவுடன் நெருங்கிப் பழிகிய முதல்நிலை தொடர்பாளர்கள் 

என்பது குறிப்பிடத்தக்கது.