SuperTopAds

மனைவியின் சம்பளத்திலேயே சீவியம் நடக்கிறது! கொவிட் செயலணிக்கு பணம் கொடுக்க முடியாது, அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மனைவியின் சம்பளத்திலேயே சீவியம் நடக்கிறது! கொவிட் செயலணிக்கு பணம் கொடுக்க முடியாது, அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அறிவிப்பு..

மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும், தனது சம்பளம் கடன் ஒன்றுக்கு வெட்டப்படுவதாகவும், தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு பணம் எதனையும் வழங்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். 

கடன் ஒன்று பெற்றமைக்காக தனது சம்பளம் முழுவதும் அதற்கு அறவிடப்படுவதாகவும், தற்போது மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஒரு குறிப்பிட்ட தொகையை 

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதாகவும், சுமார் 300 இலட்சம் வரை வங்கிக் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.