அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்குமா அரசாங்கம்..? அமைச்சர் மஹிந்த அமரவீர பதில்..
நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தாலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரச ஊழியர்களின் சம்பளம் வெட்டப்படாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒருதொகையை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.