ஊரடங்குச் சட்டம் செப்ரெம்பர் 6ம் திகதிவரை நீடிக்கப்பட்டது! ஜனாதிபதி தலமையிலான கூட்டத்தில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்குச் சட்டம் செப்ரெம்பர் 6ம் திகதிவரை நீடிக்கப்பட்டது! ஜனாதிபதி தலமையிலான கூட்டத்தில் தீர்மானம்..

நாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்ரெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ந்து கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாநாயக்க தேரர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாட்டை இரு வாரங்களுக்கு முடக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து, கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், குறித்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு 

பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு