ஜனாதிபதி தலைமையில் இன்று கூடுகிறது தேசிய செயலணி! சில தளர்வுகளடன் ஊரடங்கு நீடிக்கலாம் என தகவல்..
நாட்டின் சமகால நிலைமைகள் குறித்தும் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா? என்பது குறித்து ஆராய்வதற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் இன்று உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தொிவித்துள்ளார். கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினசரி பதிவாகும் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகளை ஆராய்ந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.சுகாதார நடைமுறைகளை
பொதுமக்கள் முறையாக பின்பற்றினால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில தளர்வுகளுடன் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படலாம். என கொழும்பு ஊடகங்கள் சில சுட்டிக்காட்டியிருக்கின்றன.