காதலனை தாக்கிவிட்டு காதலியை கூட்டு பலாத்தாகரம்!! -6 பேர் கொண்டு கும்பலின் கொடூர செயல்-
இந்தியாவின் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் ஒரு காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றனர்.
அங்கு காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது.
பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டாக பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் கல்லூரி மாணவியிடமும், அவரது காதலனிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது.
பின் மாணவியை அவரது காதலன் மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானது தெரிந்தது. கூறப்படுகிறது. பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.