முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218 ஆம் ஆண்டு வெற்றி நாள்!!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218 ஆம் ஆண்டு வெற்றி நாள்!!

முல்லைத்தீவு - கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218ஆம் ஆண்டு நினைவாக மன்னனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் முல்லைத்தீவிலுள்ள மக்கள் தொடர்பகத்தில் இன்று இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கோவிட் - 19 பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்ப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டார வன்னியனின் திருவுருவ படத்துக்குச் சுடர் ஏற்றி, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு