SuperTopAds

30ம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கை நீடிப்பதா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ள கருத்து, வெள்ளியன்று உயர்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
30ம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கை நீடிப்பதா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ள கருத்து, வெள்ளியன்று உயர்மட்ட கலந்துரையாடல்..

நாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை 30ம் திகதிக்கு பின்னும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறியுள்ளார். 

நாட்டில் கொரோனா பரவல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து 10 நாள் ஊரடங்கு தற்போது அமுலில் உள்ள நிலையில், தொடர்ந்தும் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்தே வருகின்றது. 

இந்நிலையில் 30ம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா என்பதை தீர்மானிக்கப்போவதாக கூறப்படுகின்றது.