கொரோனா நோயாளியின் சடலத்திற்குப் பதிலாக இயற்கை மரணமடைந்த முதியவரின் சடலத்தை மின் தகனம் செய்ததால் தகராறு!

ஆசிரியர் - Editor I
கொரோனா நோயாளியின் சடலத்திற்குப் பதிலாக இயற்கை மரணமடைந்த முதியவரின் சடலத்தை மின் தகனம் செய்ததால் தகராறு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு பதிலாக இயற்கை மரணமடைந்தவரின் சடலத்தை வவுனியாவுக்கு கொண்டு சென்று தகனம் செய்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 22ம் திகதி முறிகண்டி பகுதியை சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என நேற்றய தினம் இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோது அங்கு சடலத்தை காணவில்லை. 

இதனையடுத்து உறவினர்கள் குழப்பமடைந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டபோது 23ம் திகதி முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில், 

அவருடைய சடலத்திற்கு பதிலாக முறிகண்டியை சேர்ந்த முதியவரின் சடலத்தை வவுனியா கொண்டு சென்று சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் மின் தகனம் செய்த விடயம் தொியவந்திருக்கின்றது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக

பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடமும்,பொலிசாரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் எரித்த உடலினை மீண்டும் கொண்டுவர முடியாத நிலையில் இருதரப்பினரும் இணக்கப்பாட்டுக்கான பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு