அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!
அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை தேசிய கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்மொழிந்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.