செப்ரெம்பர் மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமா? கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்..

ஆசிரியர் - Editor I
செப்ரெம்பர் மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமா? கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்..

கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சு ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

அதன்படி, செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன 

உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும் சில வகுப்புகளை மாத்திரம் 

கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் 

கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அத்தோடு, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் 

சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு