ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு இராணுவ தளவதி விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு இராணுவ தளவதி விடுத்துள்ள அறிவிப்பு!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோரும் தாம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியாகவேண்டும். 

மேற்கண்டவாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் இது வைரசை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனைப் படி விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும். தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை. வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் இராணுவத்தினரிடம் 

உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு