30ம் திகதிக்கு பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது குறித்து அரச உயர்மட்டம் ஆராய்வு! கொழும்பு ஊடகங்கள் தகவல்..
நாட்டில் டெல்டா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 30ம் திகதிக்கு பின்னும் நீடிப்பது தொடர்பாக அரச உயர்மட்டம் ஆராய்வதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடித்தால் நோயாளர்களின் எண்ணிக்கை குறையலாமென சுகாதாரத்துறை நிபுணர்கள்
அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்படி ,எதிர்வரும் வியாழன்வரை நிலைமைகளை அவதானித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளது.