10 நாட்களுக்கு மேல் முடக்கம் நீடிக்காது! அரசாங்கம் திட்டவட்டம், இராஜாங்க அமைச்சர் விளக்கம்...
நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முடக்கநிலை 10 நாட்களுக்கு மேல் நீடிக்காது. என கூறியிருக்கும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம, 10 நாட்களுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு 14 நாட்களிற்கு நீடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது 5000 ரூபாய் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள இம்முறை 10நாட்களிற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இரண்டாயிரம் ரூபாய் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் எனினும் ஆகக்குறைந்தது இரண்டாயிரம் ரூபாயை வழங்குவதை பாராட்டவேண்டும் என தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும்
மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.