SuperTopAds

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! மக்களின் கையில் பொறுப்பு..

ஆசிரியர் - Editor I
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! மக்களின் கையில் பொறுப்பு..

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக் குறைக்கப்படலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது. 

சமூகத்தின் மத்தியில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடந்த வாரம் முழுதும் பதிவான தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். 

உயிர்களுக்கும் நாட்டுக்கும் மீள முடியாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் 10 நாட்களுக்குப் பிறகும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

ஊரடங்கு உத்தரவு விதித்ததன் பலனைப் பெறுவதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார். பல குழுக்கள் முடக்குதலின் அவசியத்தை சுட்டிக்காட்டியதால் 

பொறுப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் அதிகாரிகள் வழங்கிய அனுமதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.