நாடு முழுவதும் பொலிஸ் சிறப்பு நடவடிக்கை நேற்றிரவு தொடக்கம் ஆரம்பமானது! பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு..
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலமையகம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்றிரவு முதல் இச்செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக தனி பொலிஸ் குழுக்களை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாட்டை மூடுவதற்கு அரசு எடுத்த முடிவின்படி இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்ய நேற்றிரவு 10.00 மணி முதல் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளைப் பயன்படுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.