மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி வீதி ஓரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்!
கொரோனா மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி வீதி ஓரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.
பின்னர், சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.