SuperTopAds

நாட்டை 3 வாரங்களுக்காவது முடக்குங்கள்! 10 பங்காளி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..

ஆசிரியர் - Editor I
நாட்டை 3 வாரங்களுக்காவது முடக்குங்கள்! 10 பங்காளி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..

நாடு தற்போதுள்ள அபாய நிலையிலிருந்து மீள்வதற்கு 3 வாரங்கள் நாட்டை முடக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் 10 பங்காளி கட்சிகள் ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றனர். 

குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கட்டமைப்பால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் கட்சியின் அத்துரலிய ரதன தேரர்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார

லங்கா சமசமாஜக் கட்சியின் திஸ்ஸ விதாரன

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா

எக்ஸத் மஹஜன பெரமுன தலைவர் டிரான் ஹலஸ்

இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் வீரசிங்க

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன

யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க

ஆகியோர் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். குறைந்தபட்சம் 3 வாரங்களுக்காவது நாட்டை முடக்குமாறும் 

இல்லையெனில், இலங்கையின் நிலைமை மிகவும் பாரதூரமான நிலைக்கு செல்லுமெனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.