SuperTopAds

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழப்பு!

பண்டாரவளை - சமகி மாவத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணடைந்து வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 

62 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிராம உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் 

நேற்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.