நாடு முழுவதும் ஒரு மாதகால பொதுமுடக்கம்..! இவ்வார இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என கொழும்பு ஊடகங்கள் தகவல்..
நாட்டில் டெல்டா வகை திரிவு வைரஸ் பரவலின் தாக்கம் மிகமோசமாக அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது.
அதன் அடுத்தகட்ட நகர்வாக நாட்டை முடக்குவதற்கு ஆலோசித்து வருகிறது. வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இடைவேளை சகிதமான இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத்துறையின் உயர்மட்ட வட்டாரங்களை
மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுமுடக்கம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் அதேசமயம் அத்தியாவசிய சேவைகளை மட்டும் இயக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் குறித்தான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.