நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா? தீவிரமாக ஆராய்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா? தீவிரமாக ஆராய்கிறது அரசு..

சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடு முழுவதும் இன்று முதல் தினசரி இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு 

அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது. நாட்டில் டெல்ட்டா வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 150இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 

வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதேவேளை,  நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் 

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதத்தை விடவும் அதிகரிக்காத 

எண்ணிக்கையிலானோருக்கு ஒன்றுகூட முடியும். எவ்வாறிருப்பினும், பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு