SuperTopAds

நாட்டில் பொது முடக்கத்தை அறிவிக்க தயாராகிறதா அரசு..? அமைச்சர் சன்ன ஜயசுமண தொிவித்துள்ள கருத்து..

ஆசிரியர் - Editor I
நாட்டில் பொது முடக்கத்தை அறிவிக்க தயாராகிறதா அரசு..? அமைச்சர் சன்ன ஜயசுமண தொிவித்துள்ள கருத்து..

நாடு முழுவதும் முடக்க நிலையை அறிவிப்பதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புதுறை ஆகியவற்றின் ஆலோசனை கிடைக்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின்நிற்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கூலித்தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வாழ்வதற்கான முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அனைத்து விடயங்கள் குறித்து சிந்தித்தே, நாடு என்ற அடிப்படையில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியுமெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.