தமிழீழ விடுதலை புலிகள் காவல் காத்த எல்லையில் சிங்கள குடியேற்றங்கள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இதன் ஊடாக எமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக தமிழர்களின் நில ம் அபகரிக்கப்படும் உண்மை உலகத்திற்கு தெரியவேண்டும். தெரியப்படுத்தப்படவேண்டும். என வ டமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அ த்து மீறல்கள் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்கள். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கரு த்து தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழீழ விடுதலை புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் அல்லது வடமாகாண எல்லையில் சிங்கள மக்களோ அல்லது பௌத்த விகாரைகளோ இருந்ததில்லை. ஆனால் இன்று பௌத்தர்களே வாழாத பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும், தமிழீழ விடு தலை புலிகள் அரணாக நின்ற இடங்களில் சிங்கள
குடியேற்றங்களும் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கொக்கிளாய் பகுதியில் தமிழர் ஒரு வருக்கு சொந்தமான நிலத்தில் விகாரை அமைக்கப்படுவதையும், கொக்கிளாய் இறங்குதுறையை யும், அங்கே சிங்கள மீனவர்கள் சுதந்திரமாக சட்டவிரோத தொழில்களை செய்வதையும் நேரில் பார்த்துள்ளார்கள். இதேபோல் ஆமையன்குளம்,
முந்திரியை குளம் மற்றும் நாயாறு பகுதிகளுக்கும் சென்று அங்கே தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கரையோர பகுதிகள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்படுவதை பார்திருக்கின்றார் கள். இதன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை நல்லா ட்சி அரசு என கூறிக்கொள்ளும் இந்த அரசும் அபகரி
த்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை உலகத்திற்கு தெரியவேண்டும். மாகாணசபை உறுப்பின ர்களின் இந்த பயணம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரி ப்பதை இந்த அரசாங்கமும் நிறுத்தவேண்டும் என்றார்.