மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை காணவில்லை..!
கொழும்பு - ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 71 வயதான அழகேசன் சிவகாமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்த பெண் ராகமை வைத்தியசாலையின் 30வது வாட்டில் கடந்த 12ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணை பார்ப்பதற்காக 13ம் திகதி அவரது மகன் வைத்தியசாலைக்கு சென்ற வேளையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.