SuperTopAds

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தன் அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும்...

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தன் அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும்...

முல்லைத்தீவு மாவட்ட செயலர் தமக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுடைய வாழ்விடங்களுக்குள் அடாத்தாக நுழையும் சிங்கள மீனவர்களையும், சிங்கள மக்களையும் தடுக் க நடவடிக்கை எடுக்கவேண்டும். என மாகாணசபை உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர் பில் ஆராய்வதற்காக வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 22 வரையான மாகாணசபை உறுப்பினர்கள் இன்;று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்க ளுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். 

இதன் நிறைவில் மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தக்கோரி ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜர் ஒன்றிணை மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரனிடம்; மாகாண சபை உறுப்பினர்கள் கையளித்திருந்தார்கள். இதன்போது இடம் பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி கோரிக்கையினை மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளார்கள். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கருத்து தெரிவிக்கையில், நாயாறு பகுதிக்கு சென்றிருந்தபோது அங்கே சிங்கள இனத்தைவர் ஒருவர் தனியாக 40 படகுகளை வைத்து தமிழ் மக்களுக்கு சொந்தமான இடத்தில் தொழில் செய் து வருகின்றார் என்பதை அறிந்து கொண்டோம். 

அதனை கட்டுப்படுத்த மாவட்ட செயலரின் கீழ் உள்ள கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மாவட்ட செயலரான நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எடுத்திருக்கவேண்டும். ஆனால் அ வ்வாறான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த சிங்களவர் தான் நினைத்தால் போல் தொடர்ந்தும் தொழில் செய்து வருகின்றார். 

எனவே இவ்வாறான சில விடயங்களை மாவட் ட செயலர் கவனத்தில் கொள்ளவேண்டும் என கேட்டார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில், கொக்கிளாய் இறங்துறைக்கு சென்றிருந்தபோது அங்கே எந்த சலனமும் இல்லாமல் சிங்கள மீனவர்கள் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக கரைவலை இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு 72 பே ருக்கு அனுமதி கொடுத்ததாக கூறிக்கொண்டு இப்போது பெருமளவு சிங்கள மீனவர்கள் அங்கே தங்கியிருக்கின்றார்கள். அதனை மேலும் அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்வதுடன் சட்டத்திற்கு மாறான தொழில்களையும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இது தொடர்பா க மாவட்ட செயலர் உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.