கொரோனா தொற்றுக்குள்ளான பெண் 9 மாத குழந்தையுடன் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடினார்..
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் வைத்தியசாலையிலிருந்து 9 மாத சிசுவுடன் தப்பி சென்றிருக்கின்றார்.
குறித்த சம்பவம் கேகாலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது. கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
கேகாலை பொது வைத்தியசாலையில் 2ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தபோதே அவர் தப்பிச் சென்றுள்ளார்.
பி.சி.ஆர். பரிசோதனைக்கு அமைவாக குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.