SuperTopAds

ஆயுள்வேத மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு கொரோனா நோயாளியும் உயிரிழக்கவில்லை! 10388 படுக்கைகள் காலியாக உள்ளதாம்..

ஆசிரியர் - Editor I
ஆயுள்வேத மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு கொரோனா நோயாளியும் உயிரிழக்கவில்லை! 10388 படுக்கைகள் காலியாக உள்ளதாம்..

ஆயுள்வேத சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறும் எந்தவொரு கொரோனா நோயாளியும் இதுவரை உயிரிழக்கவில்லை. என ஆயுள்வேத விவகாரங்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தம்மிக அபேகுணவர்த்தன கூறியுள்ளார். 

நேற்று குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிக்கைககள் வெளியிடப்பட்டன. கடந்த 45 நாட்களில் 3820 கொவிட் தொற்றாளர்கள் ஆயுர்வேத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 

2843 நோயாளர்கள் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் சுமார் 10,388 படுக்கைகள் உள்ளன என்றும் அபேகுணவர்தன குறிப்பிட்டார்.