பயணத் தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம்! ஜனாதிபதி தலமையில் இன்றும் உயர்மட்ட கலந்துரையாடல், அதிமுக்கிய தீர்மானம் இன்று வெளியாகும்..
நாடு தற்போதுள்ள நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றே எடுக்கவேண்டும். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் பயணத்தடையை கடுமையாக அமுல்படுத்துவதா அல்லது முழு ஊரடங்கு அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று (13) வெள்ளிக்கிழமை
நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வரும் நிலையில், 100இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்
நாளாந்தம் பதிவாகிவரும் பின்னணியில் இன்றைய கூட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகிறது.