3 வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த 348 பேர் உயிழப்பு!! -மத்திய அரசு தகவல்-
இந்தியா நாட்டில் கடந்த 3 வருடங்களில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 348 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்திம் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளிக்கையிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் கொடுக்ககையில்:-
குறிப்பாக 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் பொலிஸ் காவலில் 348 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிமன்ற காவலில் 5 ஆயிரத்து 221 பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் பொலிஸ் காவலில் 23 பேரும், நீதிமன்ற காவலில் 1,295 பேரும் மரணமடைந்துள்ளனர். மத்தியபிரதேசத்தில் பொலிஸ் காவலில் 34 பேரும், நீதிமன்ற காவலில் 441 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றார்.