SuperTopAds

முல்லைத்தீவுவில் சிங்களவரின் அத்துமீறலை உடன் நிறுத்தக் கோரி போராட்டம்!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவுவில் சிங்களவரின் அத்துமீறலை உடன் நிறுத்தக் கோரி போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் மற்றும் சட்டவிரோத கடல் தொழிலை தடுத்து நிறுத்த கோரி வடக்கு மாகாண சபையினர் இன்று மாலை கண்டன போராட்டம் ஒன்றை நடத்தினர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்க்கு முன்பாகவே அவர்கள் இப் போராட்டத்தை நடத்தினர்.

இது எங்கள் பூமி, எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழர் தேசம் தமிழருக்கே உரித்தானது, அத்துமீறும் சிங்கள மீனவர்களை தடுத்து நிறுத்து என்று எழுதிய பதாகைகளை கைகளில் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண சபை சார்பாக பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான கோரிக்கை மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.