பேரழிவை தடுக்க ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்துவதே வழி..! விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அழுத்தம்..
நாட்டில் கொரோனா தொற்று பரவல் மிக ஆபத்தானதாக மாறியிருக்கும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் டெல்ட்டா திரிபு அதிகளவில் பரவி வருகின்றது. அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என AMS சங்கத்தின் தலைவர் மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். தற்போது இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை
கவலைக்கிடமாக உள்ளதுடன், ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிவேக உயர்வு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நோயாளர்களுக்கான படுக்கைகள் நிரம்பியுள்ளதுடன், ஒட்சிசன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில்,
கொரோனாவின் பேரழிவை நோக்கி இன்னும் சில நாட்களில் சென்றுவிடுவோம். எனவே, இது திருப்தியடைவதற்கான நேரம் இல்லை என்பதால், மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.