SuperTopAds

சிங்கள குடியேற்றங்களை எதிர்து மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு பயணம்...

ஆசிரியர் - Editor I
சிங்கள குடியேற்றங்களை எதிர்து மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு பயணம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீ றல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 

வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் வரையில் காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடி அங்கியிருந்து கொக்கிளாய் விகாரை பகுதிக்கு சென்றிருந்தனர். குறித்த விகாரை அமைந்துள்ள பகுதியில் பௌத்தர்கள் எவரும் வாழவில்லை. மேலும் அந்த விகாரை தமிழர் ஒருவரின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

அனை பார்வையிட்ட பின்னர் முல்லைத்தீவு கொக்கிளாய் இறங்குதுறையை வடமாகாணசபை உறுப்பினர்கள் நேரில் பார்i வயிட்டிருந்தனர். குறித்த இறங்குதுறை தமக்கு சொந்தமானது என கொக்கிளாயில் அத்துமீறி குடியிருக்கும் சிங்கள மீனவ ர்கள் உரிமைகோரிவந்தனர். ஆனால் அது தமிழர்களுக்கே சொந்தமானது.

என அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த இடத்திற்கு இன்று காலை சென்ற வடமாகாணசi ப உறுப்பினர்களிடம் தமிழ் மீனவர்கள் தங்கள் குறைபாடுகளை கூறினார்கள். இதேவேளை மாகாணசபை உறுப்பினர்கள் வ ருவதையும் பொருட்படுத்தாமல் சிங்கள மீனவர்கள் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை இழுத்தார்கள்.

பின்னர் மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டைக்கேணி, மண்கிண்டி மலை, ஆமையன்குளம், முந்திரிகைகுளம் ஆகியன இடங்களுக்கு சென்று தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் சிங்கள மக்களுக்கு அபகரித்து வழங்கப்பட்டுள்ளமையினை நேரில் அவதானித்தனர். பின்னர் அங்கிருந்து நாயாறு பகுதிக்கு வந்த மாகாணசபை உறுப்பினர்கள்,

நாயாறு பகுதியில் 72 சிங்கள மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடி அனுமதியை வழங்கிவிட்டு சுமார் 300ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்து கடற்றொழில் செய்துவரும் பகுதிகளையும் பார்வையிட்டனர். இறுதியாக முல்i லத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மாகாணசபை உறுப்பினர்கள்,

அங்கு சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திய பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியே ற்றங்களை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்புவதற்கான மகஜரினை முல்லைத்தீவு மாவட்ட செயலர் தி ருமதி ரூபாவதி கேதீஷ்வரனிடம் கையளித்திருந்தார்கள்.