SuperTopAds

வாகன இறுக்குமதிக்கான தடை 2022ல் நீக்கப்படுமா, நிதியமைச்சு தகவல்கள் கூறுவதென்ன?

ஆசிரியர் - Editor I
வாகன இறுக்குமதிக்கான தடை 2022ல் நீக்கப்படுமா, நிதியமைச்சு தகவல்கள் கூறுவதென்ன?

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை 2022ம் ஆண்டும் தொடரும் என நிதி அமைச்சின் தகவல்கள் தொிவித்திருக்கின்றது. 

கடந்த வருடம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வாகன இறக்குமதி தடை உள்ளிட்ட அரச செலவீனங்களுக்கான தடைகளை 

தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் தீர்மானங்களை மேற்கொள்ள நே்ததாகவும்  இது குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ 

தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் நிதி அமைச்சின் தகவல்கள் ஊடாக அறியக் கிடைத்துள்ளது.

மேலும் அரச திணைக்களங்களுக்கான வாகன இறக்குமதிக்காக எந்த விதத்திலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பது தொடர்பில் 

தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களங்களில் உள்ள பழைய வாகனங்களை புதுப்பித்து மீண்டும் பாவிப்பதற்கு 

மற்றும் தற்போது பல்வேறு காரணங்களுக்காக சுங்கத்திணைக்களத்தினால் விடுவிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை அரசுடைமையாக்கி 

திணைக்களங்களுக்கு வழங்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வாகன இறக்குமதிக்காக 2400 கோடி ரூபா வரையில் செலவிடப்படும் அதேவேளை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு 

வரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1.2 ட்ரில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கைக்கு 5 – 6 இலட்ச வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அதேவேளை 2015 ஆம் ஆண்டு 

இலங்கைக்கு அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆண்டாகும். அந்த ஆண்டில் மாத்திரம் 647000 இலட்ச வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.