குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை முற்றாக தவிருங்கள்! குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை முற்றாக தவிருங்கள்! குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர எச்சரிக்கை..

சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை முற்காக தவிருங்கள். என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சன்ன பெரேரா அறிவுறுத்தியிருக்கின்றார். 

இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் பதிவாகும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த குழந்தை மருத்துவ வல்லுநர் தீபால் பெரேரா கூறுகையில், 

பாதிக்கப்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதுடன், தொற்று உள்ள குழந்தைக்கு சத்தான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு