இரு வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்துங்கள்..! கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உயர்வை தடுக்க அதுவே வழி, பேராசிரியர் சுனெத் அகம்பொடி ஆலோசனை..

ஆசிரியர் - Editor I
இரு வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்துங்கள்..! கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உயர்வை தடுக்க அதுவே வழி, பேராசிரியர் சுனெத் அகம்பொடி ஆலோசனை..

நாட்டில் தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 தொடக்கம் 300 ஆக உயர்வதை தடுக்க இரு வாரகால ஊரடங்கை அமுல்படுத்துமாறு 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார். இன்னும் இரு வாரங்களில் மரண எண்ணிக்கை 150 ஆக உயரும் என 

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க, 

அனைத்து நோயாளர்களையும் வைத்தியசாலைகளில் சேர்ப்பதை துரிதப்படுத்த வேண்டும், வீட்டு சிகிச்சை, நோயாளிகளின் போக்குவரத்து 

மற்றும் அவசர சேவைகள் போன்ற சேவைகளை வழங்க ஒரு சரியான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றார். 

இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இரு வார காலத்துக்கு 100 சதவீத ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும். 

என பேராசிரியர் சுனெத் அகம்பொடி மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு