நாடு அடுத்துவரும் இரு வாரங்களில் மிகமோசமான அபாயத்தை சந்திக்கும்! கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள், அரசுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நாடு அடுத்துவரும் இரு வாரங்களில் மிகமோசமான அபாயத்தை சந்திக்கும்! கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள், அரசுக்கு எச்சரிக்கை..

நாட்டில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, 

எதிர்காலத்தில் கோரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் 

தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அடுத்த இரு வாரங்களில் தினசரி நோய்த்தொற்றாளர்கள் அதிக எண்ணிக்கையில் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் மருத்துவமனைகள் கையாள முடியாது. கடந்த சில நாள்களில் எட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் உச்சத் திறனுக்கு நெருக்கமாக இருப்பதால், 

வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களின் ஆதரவைக் கேட்டு, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க மொத்த தடுப்பூசிகளின் குறைவு ஒரு காரணம். 

பெரும்பாலான இலங்கையர்கள் முதல் டோஸை மட்டுமே பெற்றுள்ளனர். இரண்டு அளவுகளிலும் தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே வைரஸிலிருந்து பாதுகாப்பதாகக் கருத முடியும். 

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் வைரஸ் பாதித்தாலும் அவர்கள் அதன் நோய் கடத்திகள் என்று மட்டுமே அர்த்தம் என்றும் பொதுச் சுகாதார பரிசோகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு