தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் வீட்டிலேயே உயிரிழப்பு! கண்காணிப்பிற்காக சென்ற சுகாதார பரிசோதகரால் கண்டுபிடிப்பு..
கொழும்பு - பாணந்துறை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனியாக வீட்டில் இருந்துவந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகர்கள் அவரின் உடல்நிலை தொடர்பில் அவதானிப்பதற்காக
குறித்த வீட்டுக்கு சென்ற போதே இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.